தமிழீழத்திற்கான கதவு புதிய அரசியலமைப்பினால் திறக்கப்படுகிறது

0
178

னி தமிழீழத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக, புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு கிழக்கிற்கு தன்னாட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை நரேந்திர மோடி, மைத்திரிபால சிறிசேன, சம்பந்தர் ஆகிய மும்முர்த்திகள் மூலம் இந்தியாவில் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ குறிப்பிடுகின்றார். தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘அண்மையில் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்களின் ஆதரவை பெற்றுக் கொண்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். nike homme solde பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் புதிய அரசியலமைப்பு என்ற நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது. இதற்கிடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதிக்கும், சம்பந்தனுக்கும் ஒரே நேரத்தில் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். Officiel Christian Louboutin அத்தோடு பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. இவ்வனைத்து நிகழ்ச்சி நிரல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முயற்சிக்கும் வடகிழக்கு ஒற்றையாட்சியை பெற்றுக் கொள்ளும் விடயமே முன்னெடுக்கப்படுகிறது. இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தன்னாட்சியை வழங்க இணங்கியுள்ளனர். இது சம்பந்தனுக்கு கிடைத்த வெற்றியாகும். புதிய அரசியலமைப்பில் தன்னாட்சி உள்வாங்கப்படவுள்ளது. தன்னாட்சியை இலங்கையின் அரசியலமைப்பு ரீதியாக பெற்றுக் கொள்ளும் சம்பந்தன் அதன் பின்னர் ஐ.நா.வின் ஆதரவுடன் தனித் தமிழீழத்திற்கான தனது நிகழ்வுகளை முன்னெடுப்பார். அரசியலமைப்பினூடாக தன்னாட்சி வழங்கப்படும்போது, ஐ.நா அதனை பயன்படுத்தி தமிழீழத்துக்கான அங்கீகாரத்தை வழங்கும். அதில் எந்தவொரு சிக்கலும் இருக்காது. 27,000 படையினர் தங்களது உயிர்களை அர்ப்பணித்து பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து பிரிவினையை தடுத்தனர். ஆனால் இன்று மைத்திரி, ரணில் அரசாங்கம் படையினரைக் காட்டிக் கொடுத்து புலிப் பயங்கரவாதிகளின் தேவைகளை நிறைவேற்றுகின்றது. ஆயுதங்களுடன் தனித் தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில் இன்று அரசியலமைப்பு ரீதியாக ஐ.நா.வின் உதவியுடன் அதனை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சி சம்பந்தனினால் முன்னெடுக்கப்படுகிறது. adidas zx flux amazon இலங்கையில் விக்கினேஸ்வரன் அதற்கான அடிப்படை நடவடிக்கைகளை படிப்படியாக முன்னெடுக்கின்றார். மோடி மறுபுறம் தனது நாடகத்தை அரங்கேற்றுகிறார். இவ்வாறு நாட்டை காட்டிக் கொடுக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றன. இதனை நாம் ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்பதாக சொன்னோம். ஆனால் யாரும் கேட்கவில்லை. இன்று நாம் சொன்னது அனைத்தும் உண்மையாகிக் கொண்டிருக்கின்றன’ என்றும் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)