தமிழர் வரலாறு

பதவியேற்றவுடன் பண்டாரநாயக்கா 1956ம் ஆண்டு யூன் மாதம் 5ம்திகதி சிங்களம் மட்டும் மொழி மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனை ஐக்கியதேசியக் கட்சியும் ஆதரித்தது.

தொடக்கத்தில் நியாயமான அளவு தமிழ் மொழிப் பயன்பாட்டிற்கு இம்மசோதாவில் இடமளிக்க பண்டாரநாயக்கா விரும்பிய பொழுதும் பிக்குகள் முன்னனி எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.

இச் சட்டம் கரையோரச் சிங்கள மக்கள் தங்கள் பொருண்மிய சீர் கேடுகளுக்கு தமிழர் ஆங்கிலம் கற்று அரசாங்கப் பதவிகளில் அதிகம் இருக்கும் தமிழரே அடிப்படைக் காரணம் என்கின்ற இனவாத நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.

அன்றைய தினமே (5ம் திகதி ) செல்வநாயகம் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது காந்தி பின்பற்றிய சாத்வீக (அகிம்சை) வழிகளில் நாடாளுமன்றத்திற்கு முன்னே களனி முகத்திடலில் 300 பேர் கொண்ட சத்தியாக்கிரகம் எனப்படும் அமைதி வழியிலான எதிர்ப்பில் ஈடுபட்டது.

அன்றைய தினமே பிக்குகள் முன்னனி காலணி முகத்திடலுக்கு ஊர்வலமாக வந்து அங்கேயிருந்த தமிழ்த் தொண்டர்கள் மீது வன்முறைப் பிரயோகம் செய்தது.

பலரைத் தாக்கி, சிலரைத் தூக்கி நாடாளுமன்றத்திற்கு அண்மையிலுள்ள பெய்ரா ஏரியில் போட்டனர். இவ்வளவு நடந்தபின்னும் சிங்களப் பொலீஸ்துறை பார்வையாளராக நின்றது.