பிரான்சில் நடைபெற்ற கேணல் பரிதி அவர்களின் ஓராண்டு வீர வணக்க நிகழ்வும், கடந்த 08.11.2012 அன்று பிரான்சு மண்ணில் படுகொலை செய்யப்பட்ட கேணல்.பரிதி அவர்களின் ஓராண்டு நினைவு வணக்க நிகழ்வு அவர் விதைக்கப்பட்ட துயிலும் இல்லத்தில் காலை 9.00 மணிக்கு அவரின் கல்லறை மீது தேசியச் செயற்பாட்டாளர்களால் தேசியக் கொடி போற்க்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக திரு. சத்தியதாசன் அவர்களும், லாக்கூர்னோவ் மாநகரசபை உறுப்பினரும், கேணல் பரிதியின் நண்பருமாகிய அந்தனி றூசெல் அவர்கள் உரையாற்றி சோகத்தின் மிகுதியால் அவரால் பேசமுடியாதது போனது. அதனைத் தொடர்ந்து நண்பர்கள் உரையாற்றினர். கேணல் பரிதி அவர்களின் கல்லறை மீது அனைவரும் உறுதியெடுத்துக்கொண்டனர்.




