நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தினால் வடமாகாண ரீதியிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது.

இதன் வரிசையில் இன்றைய (12) முதலாவது போட்டியில் பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கரவைச் சுடர் விளையாட்டுக் கழகம் மோதியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் புத்தூர் எவரஸ்ற் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழகம் மோதியது.

ஆட்டத்தின் முடிவின் 2 அணிகளும் தலா 1 கோலினைப் பெற்ற நிலையில், போட்டியின் முடிவைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது. சம நிலை தவிப்பு உதையில் வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

கீழே படத்தில் இன்றைய போட்டியில் பங்குபெற்றிய வல்வை அணி வீரர்களைக் காணலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)