இந்திய சமுத்திரத்தின் வங்காள விரிகுடாவை அண்டிய பகுதியில் புயலாக மாறக்கூடிய தாழமுக்கம் (Low pressure) ஒன்று ஏற்படகூடிய வாய்ப்புக்கள் உள்ளதென என சர்வதேச வானிலை அவதான நிலையங்கள் கணிப்பிட்டுள்ளன.

செய்மதி ஆதராங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவல்களின் பிரகாரம், உருவாகும் என எதிபார்க்கப்படும் இந்த குறித்த தாழமுக்கம் இலங்கைக்கு கிழக்கு தென் கிழக்கு திசையில் சுமார் 350 கடல் மைல்கள் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

குறித்த தாழமுக்கம் ஆரம்ப ஆய்வு நிலையில் உள்ளதால், இது குறித்த மேலதிக தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

வங்காள விரிகுடாவில் வருடம் தோறும் புயல்கள் (Cyclones) பொதுவாக மே மாதம் ஆரம்பித்து நவம்பர் மாதம் வரை நீடிப்பது வழமை என்பதும், இதனால் இலங்கை வடக்கு பகுதி ஓரளவு பாதிப்புக்குள்ளாவதும், இந்தியாவின் கிழக்கு கரையோரப் பகுதிகள் மற்றும் வங்காளதேசம், மியன்மார் ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச வானிலை அவதான நிலையம் ஒன்று வெளியிட்டுள்ள கீழேயுள்ள செய்மதிப் படத்தில் தற்போது உருவாகிவரும் தாழமுக்கம் காட்டப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)